உலகலவில் கை வைத்தியத்தில் ஜாதிக்காய் பயன்பாடு அதிகம் உள்ளது. நமது சித்த , ஆயுர்வேத மருத்துவத்தில் ஜாதிக்காய் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முகம் பொலிவு பெற…
ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும். மேலும் முகம் பொலிவடையும்.
தூக்கம் வர …
ஒரு சிட்டிகை ஜாதிக்காய் தூளை பசும்பாலில் கலந்து இரவு தூங்க படுக்கைக்கு போகும் முன் 1 டம்ளர் சாப்பிட்டு வந்தால் மன அழுத்தத்தைப் போக்கி, நல்ல தூக்கத்தையும் தரும். நரம்பு ஊட்டத்தை தரும்.
வாயுத்தொல்லை மற்றும் அஜீரணம் நீங்க. . .
ஜாதிக்காய்த் தூள், சுக்கு த்தூள் இரண்டையும் சம அளவு எடுத்துக்கொண்டு, அதற்கு இரண்டு பங்கு சீரகத்தைச் சேர்த்துப் பொடி செய்து, உணவுக்கு முன்னதாக மூன்று சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றில் ஏற்படும் வாயுத்தொல்லை மற்றும் அஜீரணம் நீங்கும்.
வயிற்றுப் போக்கு நிற்க…
பாக்டீரியா, வைரஸ், காரணமாக வரும் வயிற்றுப் போக்குகளுக்கு ஜாதிக்காய்த் தூள் சிறந்த மருந்தாகும்.
ஜீரணத்திற்கு. . .
ஜாதிக்காய், சுக்கு மற்றும் ஓமம் மூன்றின் பொடி ஜீரணத்திற்கு சிறந்த மருந்தாகும்.
நா வறட்சி சரியாக. . .
வாந்தி வயிற்றுப் போக்கால் ஏற்படும் தண்ணீர் தாகத்தை தணிக்கிறதுக்கு ஜாதிக்காய் ஊறல் நீர் சிறந்த தீர்வு. ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி குணமாகும்.
ஜாதிபத்ரி
ஜாதிக்காய் தெரியும். அது என்ன ஜாதிபத்ரி? ஜாதிக்காயின் விதைகளின் மேல் சூழ்ந்துள்ள சிவப்பு நிற திசுவை ஜாதிபத்ரி என்கின்றோம். ஜாதிபத்ரி மாற்று மருத்துவத்தில் சிறந்த பங்காற்றுகின்றது. ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்ரி இரண்டுமே வயிற்றுப் போக்கு, வயிறு உப்புசம், குடல்வலி, ஆகியவற்றினை போக்க பயன்படுகின்றது.
ஆண்மைக்குறைவு, மகப்பேறு இன்மை
ஜாதிக்காய் உணர்வு பெருக்கியாகவும் பயன்படுகின்றது. குழந்தைப்பேறு இன்மை, ஆண்களின் விந்து எண்ணிக்கை குறைவு , உடலுறவில் நாட்டமின்மை போன்ற பிரச்னைகளுக்கு ஜாதிக்காயும் ஜாதிபத்திரியும் மிகச் சிறந்த மருந்துகள்.
கவனம்
ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


