Friday, January 16, 2026

Choose Your Language

spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

Vasthu Directions for Water Tanks | வாஸ்து படி தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் முறைகள்

நீர், நெருப்பு, வாயு, மண் மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் ஆற்றல்கள் சரியாக ஒரு வீட்டில் இயங்கினால் மட்டுமே அந்த வீடு நேர்மறை ஆற்றல்கள் நிறைந்து செழிப்புடன் இருக்கும். மாறாக, அவை வாஸ்துபடி அமையாவிட்டால் அது சமநிலையைத் தூக்கி எறிந்து, ஏராளமான சிக்கல்களுக்கு கதவைத் திறக்கிறது.

அந்த வகையில் பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் தொட்டிகள் என்பது அவசியம் தேவை. நிலத்தடி நீர் தொட்டி மற்றும் மேல் நிலை தண்ணீர் தொட்டி என ஒரு வீட்டில் இரண்டு வகையான தண்ணீர் தொட்டிகளைக் காணலாம்.

இவை இரண்டும் நீர் சேமிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்டாலும் இந்த இரண்டும் வாஸ்து படி ஒன்றாது. இதுவே இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விதி. நிலத்தடி நீர் தொட்டி நீர் மூலகத்தை குறிக்கிறது. அதே சமயம் மேல் நிலை நீர் தொட்டி மண் மூலகத்தை குறிக்கிறது. இதன் காரணமாக, அவற்றின் வாஸ்து இடங்கள் முற்றிலும் வேறுபடுகின்றன.

ஆனால் அவற்றின் இருப்பிடம், அந்த வீட்டின் ஆற்றல் ஓட்டத்தை பெரிதும் பாதிக்கலாம். வாழ்க்கையில் சமநிலை, நல்லிணக்கம் மற்றும் செழிப்பைப் பாதுகாக்க தண்ணீர் தொட்டிகளை முறையாக வைப்பதை, வாஸ்து சாஸ்திரம் மிகவும் வலியுறுத்துகின்றது, தண்ணீர் தொட்டிக்கான வாஸ்துவைப் பின்பற்றுவது என்பது நீர் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல் நல்ல ஆற்றலைப் பெருக்குவதையும் உறுதி செய்கிறது.

பல வீட்டு உரிமையாளர்களும் வாங்குபவர்களும் மேல்நிலை நீர் தொட்டியின் சரியான இடத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்வதில்லை. சரியான திசையில் எந்த தண்ணீர் தொட்டியும் இல்லை என்றால், அந்த வீட்டில் வசிப்பவர், நிதி சிக்கல்களைச் சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். முன்னேற்றம் ஏற்படாது ஆரோக்கிய குறைபாடுகள் குடும்பத்தில் யாருக்கனும் வந்து கொண்டே இருக்கும். எனவே தண்ணீர் தொட்டியை அமைக்கும் போது, ​​வாஸ்து சாஸ்திரத்திற்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நிலத்தடி தண்ணீர் தொட்டி

நிலத்தடி நீர் தொட்டி ஈசானியம் எனப்படும் வடகிழக்கில் அமைப்பது தான் மிகச் சிறந்தது. தவிர்க்க முடியா விட்டால் வடக்கு சார்ந்து வைக்கலாம். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் மேற்கில் இருந்து கிழக்காக உள்ள அளவில் சரிபாதிக்கு மேல் வரும் பாகத்தில் சற்று கிழக்கு சார்ந்து வரும் இடத்திற்குள் அமைக்க வேண்டும். ஏனெனில் வாஸ்துவின் படி தண்ணீர் தொட்டியின் திசையான வடக்கு மற்றும் ஈசானியம் நீர் மூலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

நிலத்தடி நீர் தொட்டி சரியாக அமைந்த வீட்டில் வசிப்போர் நல்வாழ்வு, அமைதி மற்றும் செழிப்பை பெறலாம். தொடர்ச்சியாக இந்த இடங்களில் வைக்கப்படும் நீர் மனித வளர்ச்சியை மேம்படுத்தும்.

நிலத்தடி நீர் தொட்டியை தென்மேற்கிலோ அல்லது தெற்கு திசையிலோ வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, இந்த திசையில் நெருப்பு மூலகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இங்கு அமைக்கப்படும் நிலத்தடி நீர்த் தொட்டியானது கடன் பிரச்சனை குடும்பத்தில் சச்சரவு ஆகியனவற்றை ஏற்படுத்தும்.

மேல் நிலை தண்ணீர் தொட்டி

நமது பாரம்பரிய வாஸ்து சாஸ்திரத்தின் படி , தண்ணீர் மூலகம் செல்வ செழிப்புடன் தொடர்புடையது. தண்ணீரை அதிகமாக விரையம் செய்தால் செல்வம் கரையும் என்ற வழக்கு சொல் கேள்விபட்டு இருப்பீர்கள். சரியான இடத்தில் வைக்கப்படும் நீர் தேக்க தொட்டிகள் செல்வ செழிப்பை உறுதி செய்கின்றன. வாஸ்து படி வைப்பது மட்டுமில்லாது நன்கு பராமரிக்கப்படும் தண்ணீர் தொட்டியானது, வீட்டிற்குள் செல்வம் மற்றும் நேர்மறை செல்வ செழிப்பையும் சீரான ஆற்றல் ஓட்டத்தையும் நிலைத்து நிற்க உதவுகின்றது.

மேல் நிலை நீர்த் தேக்க தொட்டி வைக்க வாஸ்து படி சிறந்த இடம் தென் மேற்கு மூலை ஆகும்.

வடகிழக்கு, மேற்கு, தென்கிழக்கு மூலையில் கண்டிப்பாக அமைக்கக் கூடாது.

மேல்நிலை தொட்டியை படிக்கட்டுகளுக்கு அடியில் வைத்திருப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது மன அழுத்தம், பதட்டம் மற்றும் உடல் நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

வீட்டின் மையமான பிரம்மஸ்தானம் ஆற்றல் மையமாகக் கருதப்படுகிறது; எனவே, இங்கு மேல்நிலை தொட்டி ஆற்றல் ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும்.

பூஜை அறை அல்லது தியான அறைக்கு மேலே தொட்டியை வைப்பது எதிர்மறை அதிர்வுகளை உருவாக்கும்.

எச்சரிக்கை : இணையதளங்களில் பலவற்றில் வடகிழக்கு, வடமேற்கு இவற்றில் மேல் நிலை நீர் தேக்க தொட்டிகள் வைக்கலாம் என குறிப்பிடப்படுள்ளது. இது அடிப்டை வாஸ்து அறிவு இல்லாதவர்களால் இடப்பட்ட பதிவு என்பதில் சந்தேகம் இல்லை. கடைகளில் கிடைக்கும் சில புத்தகங்களில் கூட தவறான வாஸ்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே தகுந்த அனுபவம் வாய்ந்த பாரம்பரிய வாஸ்து நிபுணரின் ஆலோசனையை மட்டும் நாடி பயன் பெறவும்.

Popular Articles