நாயன்மார்கள்
சைவ சமய குறவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் அவர்கள் சிவபெருமானின் தோழர் என்பது சைவ சமய பற்றாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
ஒரு முறை திருவாரூர் ஆலயத்தில் இறைவனோடு சுந்தரமூர்த்தி நாயனார் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள மண்டபத்தில் எண்ணற்ற சிவனடியார்கள் வந்து குழுமி இருந்தனர்.
சுந்தர மூர்த்தி நாயனார் இவர்கள் எல்லாம் யாரென சிவபெருமானிடம் கேட்டார். அதற்கு இறைவன் என் அடியார்கள் என கூறியதோடு இவ்லாமல் சிவனடியார்களை பற்றிய பெருமையை எடுத்துரைத்தார்.
மேலும் அடியார் பெருமைகளை விரித்து நீ பாடுக என்று ஆணையிட்டார். திடீர் என இறைவன் கேட்டதால் எப்படி தொடங்குவது என சுந்தர மூர்த்தி நாயனார் சிந்தித்த வேலையில் ‘தில்லை வாழ் அந்தணர்‘ என்று அடி எடுத்து கொடுத்து தொடங்கி வைத்து அருள் புரிந்தார்.
சுந்தர மூர்த்தி நாயனார் இறைவனின் கட்டளையை ஏற்று சிவனடியார்களை போற்றி திருத் தொண்டத் தொகை என்ற பதினொரு பாடல்கள் கொண்ட பதிகத்தைப் பாடினார்.
திருத்தொண்டத் தொகை நூலில் 58 ஆண் சிவனடியார்களும், காரைக்கால் அம்மையார் மற்றும் மங்கையற்கரசியார் என இரு பெண் அடியார்களும் சேர்த்து அறுபது சிவனடியார்களை பற்றி பாடியது மட்டுமல்லாது ஒன்பது தொகையடியார்களையும் பாடியுள்ளார். ஒன்றுக்கு மேற்பட்ட ஒரு குழுவினைத் தொகுத்து குறிப்பிடுவதைத் தொகை அடியார்கள் என்கின்றோம்.
பெரிய புராணம்
சுந்தர மூர்த்தி நாயனார் பாடிய திருத்தொண்டத் தொகையை மூல நூலாகவும், நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியை வழிநூலாகவும் கொண்டு பெரிய புராணத்தை இயற்றினார் சேக்கிழார். பல்வேறு இடங்களில் உள்ள கல்வெட்டு குறிப்புகள், மக்கள் மத்தியில் செவி வழி செய்தியாக உள்ள கதைகள் இவற்றை சேகரித்து, தில்லை அம்பலத்தில் கூத்தாடும் சிவபெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்கச் சேக்கிழார், பெரிய புராணம் எனும் சிவனடியார்கள் புகழ் போற்றும் பெருங்காப்பியத்தை இயற்றி அருளினார்.
நாயன்மார்களின் குரு பூஜை நட்சத்திரம்
இறைவன் திருக்காட்சி கொடுத்து நாயன்மார்கள் முக்தி அடைந்த தினத்தை நாம் நாயன்மார் குருபூசையாக வணங்குகிறோம். நாயன்மார்களின் குருபூசை செய்வது நம் தொன்று தொட்டு செய்து வரும் மரபாகும். இல்லங்களிலும் திருக்கோவில்களிலும் நாயன்மார்களின் குருபூசை நிகழ்ந்து வருகிறது.
நாயன்மார்களும் குரு பூஜை தினங்களும்
| எண் | பெயர் | பூஜை நாள் | |
| மாதம் | நட்சத்திரம் | ||
| 1 | அதிபத்தர் நாயனார் | ஆவணி | ஆயில்யம் |
| 2 | அப்பூதியடிகள் நாயனார் | தை | சதயம் |
| 3 | அமர்நீதி நாயனார் | ஆனி | பூரம் |
| 4 | அரிவட்டாயர் நாயனார் | தை | திருவாதிரை |
| 5 | ஆனாய நாயனார் | கார்த்திகை | ஹஸ்தம் |
| 6 | இசைஞானியார் நாயனார் | சித்திரை | சித்திரை |
| 7 | இடங்கழி நாயனார் | ஐப்பசி | கார்த்திகை |
| 8 | இயற்பகை நாயனார் | மார்கழி | உத்திரம் |
| 9 | இளையான்குடிமாறார் நாயனார் | ஆவணி | மகம் |
| 10 | உருத்திர பசுபதி நாயனார் | புரட்டாசி | அசுவினி |
| 11 | எறிபத்த நாயனார் | மாசி | ஹஸ்தம் |
| 12 | ஏயர்கோன் கலிகாமர் நாயனார் | ஆனி | ரேவதி |
| 13 | ஏனாதி நாதர் நாயனார் | புரட்டாசி | உத்திராடம் |
| 14 | ஐயடிகள்காடவர்கோன் நாயனார் | ஐப்பசி | மூலம் |
| 15 | கணநாதர் நாயனார் | பங்குனி | திருவாதிரை |
| 16 | கணம்புல்லர் நாயனார் | கார்த்திகை | கார்த்திகை |
| 17 | கண்ணப்பர் நாயனார் | தை | மிருகசீருஷம் |
| 18 | கலிய நாயனார் | ஆடி | கேட்டை |
| 19 | கழறிற்றறிவார் நாயனார் | ஆடி | சுவாதி |
| 20 | கழற்சிங்கர் நாயனார் | வைகாசி | பரணி |
| 21 | காரி நாயனார் | மாசி | பூராடம் |
| 22 | காரைக்கால் அம்மையார் | பங்குனி | சுவாதி |
| 23 | குங்கிலியகலையனார் | ஆவணி | மூலம் |
| 24 | குலச்சிறையார் நாயனார் | ஆவணி | அனுஷம் |
| 25 | கூற்றுவர் நாயனார் | ஆடி | திருவாதிரை |
| 26 | கலிக்கம்ப நாயனார் | தை | ரேவதி |
| 27 | கோச்செங்கட் சோழன் நாயனார் | மாசி | சதயம் |
| 28 | கோட்புலி நாயனார் | ஆடி | கேட்டை |
| 29 | சடைய நாயனார் | மார்கழி | திருவாதிரை |
| 30 | சண்டேசுவர நாயனார் | தை | உத்திரம் |
| 31 | சக்தி நாயனார் | ஐப்பசி | பூரம் |
| 32 | சாக்கியர் நாயனார் | மார்கழி | பூராடம் |
| 33 | சிறப்புலி நாயனார் | கார்த்திகை | பூராடம் |
| 34 | சிறுதொண்டர் நாயனார் | சித்திரை | பரணி |
| 35 | சுந்தரமூர்த்தி நாயனார் | ஆடி | சுவாதி |
| 36 | செருத்துணை நாயனார் | ஆவணி | பூசம் |
| 37 | சோமசிமாறர் நாயனார் | வைகாசி | ஆயிலியம் |
| 38 | தண்டியடிகள் நாயனார் | பங்குனி | சதயம் |
| 39 | திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் | சித்திரை | சுவாதி |
| 40 | திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் | வைகாசி | மூலம் |
| 41 | திருநாவுக்கரசர் நாயனார் | சித்திரை | சதயம் |
| 42 | திருநாளை போவார் நாயனார் | புரட்டாசி | ரோகிணி |
| 43 | திருநீலகண்டர் நாயனார் | தை | விசாகம் |
| 44 | திருநீலகண்ட யாழ்ப்பாணர் நாயனார் | வைகாசி | மூலம் |
| 45 | திரு நீலநக்க நாயனார் | வைகாசி | மூலம் |
| 46 | திருமூலர் நாயனார் | ஐப்பசி | அசுவினி |
| 47 | நமிநந்தியடிகள் நாயனார் | வைகாசி | பூசம் |
| 48 | நரசிங்க முனையர் நாயனார் | புரட்டாசி | சதயம் |
| 49 | நின்ற சீர் நெடுமாறன் நாயனார் | ஐப்பசி | பரணி |
| 50 | நேச நாயனார் நாயனார் | பங்குனி | ரோகிணி |
| 51 | புகழ்சோழன் நாயனார் | ஆடி | கார்த்திகை |
| 52 | புகழ்த்துணை நாயனார் | ஆனி | ஆயிலியம் |
| 53 | பூசலார் நாயனார் | ஐப்பசி | அனுஷம் |
| 54 | பெருமிழலைக் குறும்பர் நாயனார் | ஆடி | சித்திரை |
| 55 | மங்கையர்க்கரசியார் நாயனார் | சித்திரை | ரோகிணி |
| 56 | மானக்கஞ்சாற நாயனார் | மார்கழி | சுவாதி |
| 57 | முருக நாயனார் | வைகாசி | மூலம் |
| 58 | முனையடுவார் நாயனார் | பங்குனி | பூசம் |
| 59 | மூர்க்க நாயனார் | கார்த்திகை | மூலம் |
| 60 | மூர்த்தி நாயனார் | ஆடி | கார்த்திகை |
| 61 | மெய்ப்பொருள் நாயனார் | கார்த்திகை | உத்திரம் |
| 62 | வாயிலார் நாயனார் | மார்கழி | ரேவதி |
| 63 | விறன்மிண்ட நாயனார் | சித்திரை | திருவாதிரை |



