ஜோதிர் லிங்கம் என்பது ஒளிமயமான லிங்கம் என்னும் பொருள் படும். இந்தியாவில் 12ஜோதிலிங்கத் திருத்தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை ஜோதிலிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் திருவாதிரை நாள் சோதிலிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. பொதுவாக ஜோதிர்லிங்கத்துக்கும், பிற லிங்கங்களுக்கும் இடையே எவ்வித தோற்ற வேறுபாடுகளும் தெரிவதில்லை. ஆனாலும் ஒளி வடிவத்தில் இங்கு பாவித்து வணங்குவர்.
இந்தியாவில் உள்ள ஜோதிர்லிங்கத் தலங்கள்
சோம்நாத் கோயில் பிரபாச பட்டணம் கிர் சோம்நாத் மாவட்டம், குஜராத்.
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில் ஸ்ரீசைலம், ஆந்திரப் பிரதேசம்.
மகாகாலேஸ்வரர் கோயில் உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம்
ஓங்காரேஸ்வரர் கோயில் மத்தியப் பிரதேசம்.
கேதார்நாத் கோயில் உத்தராகண்டம்
பீமாசங்கர் கோயில் சகாயத்திரி, மகாராஷ்டிரா.
காசி விஸ்வநாதர் கோயில் வாரணாசி, உத்தரப் பிரதேசம்.
திரிம்பகேஸ்வரர் கோயில் நாசிக், மகாராஷ்டிரா.
வைத்தியநாதர் கோயில் தேவ்கர், ஜார்க்கண்ட்.
நாகேஸ்வரர் கோயில் துவாரகை, குஜராத்.
இராமநாதசுவாமி கோயில் இராமேஸ்வரம் தமிழ்நாடு
கிரிஸ்னேஸ்வரர் கோயில் ஔரங்கபாத், மகாராஷ்டிரா


