பிரபஞ்ச தொடர்பு
இந்த பிரபஞ்சம் முழுவதும் எங்கும் நீக்கமற நிறைதிருக்கும் பிரபஞ்ச சக்தியே நம்மை வழி நடத்துகின்றன. அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பார்கள். அண்ட சராசரத்தோடு கடும் தவம் இருந்து, ஞானிகள் தங்களை இணைத்துக் கொண்டு அளவிலா சக்தியை அடைந்தனர்.
அந்த சக்தியை கொண்டு, ஞான திருஷ்டியில், மனித குலத்திற்கு தேவையான மருத்துவம், ஜோதிடம் உள்ளிட்ட பல்வேறு வகையான கலைகளை வடிவமைத்து அளித்தனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் மனித குலத்தை அந்த ஞானிகள் வகுத்தளித்த கலைகளே காப்பாற்றுகின்றன.
சமானியர்களுக்கு…
வினையே ஆடவர்க்கு உயிரே; வாள் நுதல்
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர்’ என,
நமக்கு உரைத்தோரும் தாமே,
அழாஅல்-தோழி!-அழுங்குவர் செலவே.
என்கின்றது குறுந்தொகை. அதாவது, தன் குடும்பம் நலமாக இருக்க, தான் செய்யும் தொழிலை உயிராக கருதி ஆண் ஈடுபட்டாக வேண்டும். குடும்பத்தில் உள்ள மனைவிக்கு தனது கணவனை தன் உயிர் போல எண்ண வேண்டும். இல்லையா? இப்படி வாழ்வை ஓட்டிக்கொண்டிருக்கும் சாதாரண மக்களுக்கு யோகம் ,ஞானம்,பிரபஞ்சம் இவற்றிற்கு ஏது நேரம்?
பிரபஞ்ச தொடர்பு
எல்லா மார்க்கங்களும் உரைத்த நம் மகான்கள் இதற்கும் தீர்வு வைக்காமலா இருப்பார்கள்.? குடும்ப வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, தன்னை இறைவனை நோக்கி நகர்த்த பக்தி யோகம் உரைத்தனர்.
எளிய யோக நெறிகளை வகுத்து அளித்தனர். ஆனாலும் எனக்கு நேரம் இல்லை – இதில் எல்லாம் ஈடுபட என புலம்புவோரும் இருக்கத்தானே செய்கின்றனர்.
அவர்களுக்கான எனிய வழியாகத்தான் தாந்திரிகம் என்ற வழியை வைத்தனர். அதில் உட்பிரிவாக, உலோகங்கள், பூமிக்குள் விளையும் கற்கள் இவற்றைப் பயன்படுத்தி பிரபஞ்சத்தோடு இணைக்கும் வழியை கண்டறிந்து அளித்தனர்.
தங்கத்தில் மோதிரம், வளையல் வெள்ளியில் மெட்டி, கொளுசு அணிவது எல்லாம் இதன் வெளிப்பாடே. ஆனால் அறியாதவர்கள் அதை எல்லாம் அலங்கார பொருட்களாக நினைத்துக்கொள்கின்றனர். என்ன செய்வது?
பஞ்சலோகம்
பஞ்சலோகம் அல்லது ஐம்பொன் என்பது தாந்திரீக கலையில் முக்கிய அங்கம் வகிக்கின்றது. இந்தியா மற்றும் நேபாளம் தேசங்களில் பஞ்சலோக பயன்பாடு ஆன்மீக துறையில் அதிகம்.
தங்கம்
வெள்ளி
செம்பு
இரும்பு
ஈயம்
இந்த ஐந்து உலோகங்களின் கலவையே பஞ்சலோகம் எனப்படுகின்றது. மனிதனை அண்டத்தோடு இணைக்கும் ஆற்றல் கொண்டது.
இதை அணியும் நபர்களை சுற்றி நேர்மறை சக்தி (Positive Energy Aura) வளையம் எப்போதும் இருக்கும் வண்ணம் செயல்படும் தன்மையை கொண்டது. காரணம் இந்த ஒவ்வொரு உலோகமும் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கிரகங்களோடு தொடர்பு கொண்டவை. அதாவது புரியும் படி சொன்னால்
தங்கம் – குரு
வெள்ளி – சுக்கிரன்
செம்பு – சூரியன்
இரும்பு – சனி
ஈயம் – கேது
மருத்துவ ரீதியான நன்மைகள்
இந்த கிரகங்களின் கதிர்வீச்சுக்களின் நேர்மறை சக்தியை ஈர்க்கும் வல்லமை கொண்டவை. எதோ ஒரு வடிவில் பஞ்சலோகத்தை நம் உடலில் படும்படி அணிந்து கொண்டால், நம் உடலின் ராஜ உறுப்புகள் நன்கு செயல்படும்.
நரம்பு சம்பத்தப்பட்ட வியதிகளுக்கும் தோல் நோய்களுக்கும் தீர்வு கிட்டும். உடல் வெப்பம் தணியும். இதனால் நாம் ஆரோக்கியம் மேம்படும். இரத்த அழுத்தம் சமநிலைப்படும்.
ஆன்மீக ரீதியான நன்மைகள்
இன்று உலகில் கண் திருஷ்டி என்பது தீராத பிரச்சனையாக உள்ளது. பஞ்சலோகம் அணிவது திருஷ்டியினால் ஏற்படும் கெடு பலன்களை தடுக்கும். நமது பஞ்சேந்திரியங்களையும் தூண்டி சரிவர இயங்க செய்து நம் நுண் உணர்வை அதிகரிக்கும்.
ஆன்ம பலம், மனோபலம், ஞானபலம் அதிகரிக்கும். நம் வீட்டில் உள்ள சிறு குழந்தைகளுக்கு அவசியம் பஞ்சலோக காப்பு அணிவிக்க வேண்டும். நோயில் இருந்து, திருஷ்டி கோளாறு இவற்றில் இருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.


