திருமணம் செய்து கொள்ளக் கூடிய பெண்ணிண் நட்சத்திரமும் ஆணிண் நட்சத்திரமும் ஒரே நட்சத்திரமாக அமைந்தால் அதை ஏக நட்சத்திரம் என்கின்றோம்.
இன்றைய காலக் கட்டத்தில் மக்கள் மத்தியில் ஏக நட்சத்திரம் கொண்டவர்களின் திருமணம் தொடர்பாக நிறைய குழப்பங்களும் சந்தேகங்களும் உள்ளன.எனவே ஏக நட்சத்திரம் உள்ளவர்கள் திருமணம் செய்யலாமா அல்லது வேண்டாமா என்பதை நாம் சற்று விரிவாக பார்ப்போம்.
மக்கள் மிகவும் முக்கியமாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அனைத்து விதிகளையும் திருமணம் சம்பந்தமான நடைமுறைக்கு உகந்த நுட்பமான விதிகளை நமக்கு போதிக்கின்ற கால பிரவேசிகை என்ற பழமையான ஜோதிட புத்தகம் துணை கொண்டு தொகுத்து வழங்குகின்றோம்.
ஏன் என்றால் சில ஜோதிடர்கள் திசா சந்திப்பு தோஷம் ஏற்படுமோ என்ற அச்சத்தின் காரணமாக ஒரே நட்சத்திரமாக வரும் அனைத்து வரன்களையும் திருமணம் செய்ய அனுமதிப்பதில்லை. இது தவறு. அத்தகைய செயலை மாற்றும் முயற்சியே இத்தொகுப்பு.
உத்தம பொருத்தம் உள்ள ஏக நட்சத்திரங்கள்
ரோகிணி, திருவாதிரை, மகம், ஹஸ்தம், விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் ஆண் மற்றும் பெண் இருவருக்கும் நட்சத்திரங்கள் ஒன்றாக வந்தால் திருமணம் செய்யலாம்.
உத்தம பலன்கள் உண்டாக்கும். திசா சந்திப்பு தோஷம் உண்டாக முடியாது.
மத்திம பொருத்தம் உள்ள ஏக நட்சத்திரங்கள்
அசுவினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம் இவைகள் ஏகநட்சத்திரமாக வந்தால் திருமணம் செய்யலாம்.
ஆனால் மத்திம பொருத்தம் தான் உள்ளது. இருந்த பொழுதும் திருமணம் செய்யலாம் பாதகமில்லை.
முற்றிலும் பொருந்தாத நட்சத்திரங்கள்
- பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி இவைகள் பெண் மற்றும் ஆண் இருவரின் நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரமாக வந்தால் திருமணம் செய்யக் கூடாது.
சிறிது கூட பொருத்தமில்லை. இந்த நட்சத்திரக்காரர்கள் திருமணம் ஒருவருக்கொருவர் செய்யக்கூடாது.
ஏக நட்சத்திரம் முக்கிய விதிகள்
பொருத்தமுள்ள ஏக நட்சத்திரத்தை கொண்ட ஆண் மற்றும் பெண்களுக்கு திருமணம் செய்யும் போது நட்சத்திரத்தின் முந்திய பாதம் ஆணுக்கும், பிந்திய பாதம் பெண்ணுக்கும் இருந்தால் திருமணம் செய்யலாம்.
பெண் நட்சத்திர பாதம் முந்தியும், ஆண் நட்சத்திர பாதம் பிந்தியும் இருந்தால் திருமணம் செய்வது நற் பலனில்லை.
கருவூரார் ஜோதிட பாடத்தில் இருந்து… (மேலும் விபரங்களுக்கு karuvurar.in)


