Home world news இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது – ரஷ்யா பெருமிதம்.

இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது – ரஷ்யா பெருமிதம்.

ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் அமெரிக்க அதிபர் டிரம்ப் மிகுந்த கடுப்பில் உள்ளார். இதனால் இந்தியாவை மிரட்டும் விதமாக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்தார்.

அமெரிக்காவின் இந்த செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்கி வருகிறது. இதனால் இந்தியா – ரஷியா இடையே உள்ள உறவில் விரிசலை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் தொடர்ந்து கொடுத்து வரும் அழுத்தங்களுக்கு எதிராக இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. தொடர்ந்து மிரட்டல்கள் இருந்த போதிலும் இந்தியா உறுதியாக இருக்கிறது.

இந்தியா- ரஷ்யா இடையே உள்ள உறவை முறிக்க செய்யும் எந்தவொரு முயற்சியும் தோல்வியடையும். இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான உறவுகள் தற்பொழுது மேலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. நீண்டகாலமாக ரஷ்யாவின் இந்தியா உடனான உறவனது நட்பு மற்றும் கலாசாரம் உட்பட பல்வேறு விஷயங்களில் வேரூன்றியுள்ளது.

என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version