Home தமிழ்நாடு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு | தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை | 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்...

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு | தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை | 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் | 5 நாளைக்கு மழை தொடர வாய்ப்பு.

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையின் விபரம் பின் வருமாறு

வடக்கு ஆந்திர தெற்கு ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு சத்தீஸ்கர் பகுதிகளில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

இதனால், தென்னிந்திய பகுதிகளின் மேலே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் விபரம் கீழ் வருமாறு

15.09.2025 திங்கள்

திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது

16.09.2025 செவ்வாய்

ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

17.09.2025 புதன்

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

18.09.2025 வியாழன்

நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

Exit mobile version