பொதுவாக அம்மாவாசை, பௌர்ணமி, சதுர்த்தசி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய நாட்கள் சுப நிகழ்வுகளை தவிர்ப்பது முற்றிலும் நல்லது.
மேலும் கீழ்க்கண்ட தீதுரு நட்சத்திரங்கள் எனப்படும் 12 நட்சத்திரங்கள் வரும் நாட்கள் மிகவும் கவனமாக சுப நிகழ்வுகள் மட்டும் இன்றி கடன் கொடுப்பது, நீண்ட வியாதிக்கு மருந்து உண்ண தொடங்குவது, நீண்ட தொலைவு பயணம் மேற்கொள்வது முற்றிலும் தவிர்க்க பட வேண்டிய ஒன்றாகும்.
கீழ்க்கண்ட பழம் பெரும் ஜோதிட பாடல் வரிகள் இதை தெளிவு படுத்துகிறது.
ஆதிரை பரணி கார்த்திகை
ஆயிலிய முப்புரம் கேட்டை
தீதுறு விசாகஞ் சோதி
சித்திரை மகம் மீராரும்
மாதனங்கோண்டார் தாரார்
வழி நடைப்பாட்டார் மீளார்
பாய்தனில் படுத்தார் தேறார்
பாம்பின் வாய் தேரை தானே
பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரம் வரும் நாட்களில் பிறருக்கு நாம் கடன் கொடுத்தால் நமக்கு இந்த பணம் திரும்ப வராது. நீண்ட தொலைவு பயணம் மேற்கொள்ள கூடாது. இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் நோய்வாய்ப்பட்டு ஒருவர் படுக்க நேரிட்டால் நோயில் இருந்து மீண்டு வருவது கடினம். பாம்பின் வாய்க்குள் சென்ற தேரை போல் ஆகும் என இச்செயுள் முடிவதில் இருந்தே இந்த தீதிரு நட்சத்திரங்கள் வரும் நாட்களின் கடினம் தெரியும். எனவே, புதிய முயற்சிகள், சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கவும்.
