Home Spiritual | ஆன்மீகம் Glory of Nandhi Devar | நந்தி தேவர் மகிமை

Glory of Nandhi Devar | நந்தி தேவர் மகிமை

சிவனின் பரிபூரண அருள் வேண்டுமானால், நந்தியை நாம் முதலில் வணங்க வேண்டும். பிரதோஷ பூஜையில் நந்தி தேவருக்குத்தான் முதல் அபிஷேகம் நடைபெறும்.

பிரதோஷ பூஜையின் போது விஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும், சிவாலயதில் இருப்பார்கள். எனவே, நந்தியை வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

யார் அந்த நந்தி தேவர்?

சிவ பெருமானின் முதல் சீடர் நந்தி தேவர். சிவனின் தலைமை வாயில் காப்பாளன். சிவனின் வாகனமாகவும் இருப்பவர் நந்தி தேவர்.

நந்தி என்பது நந்து என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து வந்ததது. “நந்து” என்றால் வளர்தல் என்று பொருள். சிவாலயங்களில் உள்ள நத்தி வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை இதன் காரணமாக கூட வந்திருக்கலாம்.

சிவனின் சுவாசம்

சிவன் கோவில்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தியை, ‘தர்ம விடை’ என்று அழைப்பார்கள். தர்மமே உருவான நந்திதேவர் தான் அந்த சிவனையே தாங்கிப் பிடித்துள்ளார்.

சிவபிரான் தனக்கு எதிரே உள்ள நத்தி விடும் மூச்சுக்காற்றைத் தான் சுவாசிப்பதாக ஐதீகம். அதாவது தர்மமே அவரின் மூச்சு. எனவேதான் சிவனுக்கும் நந்திக்கும் குறுக்கே வழிபாட்டின் போது செல்லக்கூடாது என்கின்றோம்.

பிறப்பு குறித்த புராணக்கதை

நந்தியின் பிறப்பு குறித்து லிங்க புரணாத்தில் காணலாம். சிலாத முனி – சித்ரவதி தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை. சிவனை நோக்கி தவம் இருந்தார் சிலாத முனி.

தவத்தில் அகம் மகிழ்ந்த சிவபிரான் நேரே தோன்றி, எனக்கு யாகம் நடத்த நிலத்தை பண்படுத்தும் போது உங்களுக்கு நானே வாரிசு ஆக கிடைப்பேன் என கூறி மறைந்தார்.

கொஞ்ச காலம் கழித்து, சிலாத முனி யாகம் நடத்த நிலத்தை உழுதார். அப்போது ஏர்முனையில் ஒரு செப்பு பெட்டகம் தட்டுப்பட்டது.

திறந்து பார்த்தால் ஒரு அபூர்வ குழந்தை இருந்தது. ஆம் அக்குழந்தைக்கு நான்கு கால்கள் இருந்ததது. சடாமுடி இருந்ததது.

சிவன் உரைத்த குழந்தை இது தான் என உணர்ந்தார் சிலாத முனிவர். செப்பேசன் என பெயரிட்டு வளர்த்தார். பதினான்கு ஆண்டுகள் அனைத்து கலைகளையும் கற்று தேர்ந்தார்.

ஒரு நாள் செப்பேசன் தியானத்தில் இருந்த போது, தான் சிவனின் மெய் காப்பாளன் என்பதை உணர்ந்தார். கைலாயத்திற்குள் ஆடி என்ற அசுரனை ஈசனை கேட்காமல் அனுமதித்ததால் சிவனின் கோபத்திற்கு ஆளாகி இப்பிறப்பு எடுத்ததையும் அறிந்தார்.

ஒற்றைக்காலில் சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார் செப்பேசன். தவத்தில் அகம் மகிழ்ந்த சிவபிரான், நந்தி ஈஸ்வரர் என பெயரிட்டார்.

மேலும்,கைலாயத்தில் தனக்கு இணையான அதிகாரத்தையும் பூத கணங்களுக்கு தலைவனாகவும் நியமித்தார். முதல் குருநாதர் என்ற அங்கீகாரத்தையும் அளித்தார்.

நந்தி தேவரின் சீடர்கள்

நான்கு வேதங்களையும் முதலில் சிவபிரான் நந்தி தேவருக்குத் தான் உபதேசித்ததாக புரணங்கள் கூறுகின்றன. ஆகமங்கள் மற்றும் தாந்ரீக கலைகளை பார்வதி தேவியிடம் நந்தி தேவர் கற்றதாக புரண குறிப்புகள் உள்ளது.

தான் கற்ற கலைகள் அனைத்தையும் தனது எட்டு சீடர்களுக்கு கற்பித்து உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பி கலைகளை பரப்பினார்.

ஜனகர், ஜனாதனர், ஜனத்குமாரர், ஜனந்தர், சிவயோக மாமுனி, திருமூலர், பதஞ்சலி, வியாக்கியபாதர் ஆகியோர் நந்தி தேவரின் சீடர்கள்.

நந்தி தேவர் திருமணம்

கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ளது திருமழப்பாடி. இந்திரன் வழிபட்ட தளம். இங்கு நத்தி தேவருக்கு வஸிஷ்டரின் பேத்தியும் வியாக்ர பாத முனிவரின் மகளுமான சுயம்பிரபா தேவியை பங்குனி மாத புனர்பூச நட்சத்திர நாளில் திருமணம் செய்துவித்தார் ஈஸ்வரன்.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் புனர்பூச நாளில் திருமண வைபவ நிகழ்வு, நந்தி தேவருக்கும் சுயம்பரிபா தேவிக்கும் செய்யப்படுகிறது.

உயரமான நந்தி சிலை

இந்தியாவில் உயமான நந்தி சிலை, கோவை-பாலக்காடு வழியில் உள்ள நவக்கரை மலையாள துர்கா பகவதி கோவிலில் உள்ளது. 31 அடி உயரம், 41 அடி நீளம், 21 அடி அகலம் கொண்டது இங்குள்ள நந்தி.

தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி, 12 அடி உயரமும், 20 அடி நீளமும், 8 அடி அகலமும் கொண்டதாகும். இந்த நந்தி ஒரே கல்லால் ஆனது.

நெய்யில் நீராடும் நந்தி

சிவகங்கை மாவட்டம் வேந்தன்பட்டி என்ற ஊரில் உள்ள சிவன் கோவிலில் உள்ள நந்திக்கு நெய்யில் நீராட்டுகின்றனர். ஆனாலும் ஈ அல்லது எறும்பு மொய்ப்பதில்லை என்பது சிறப்பு.

திருமால் சுதர்ஷண சக்கரம் பெற சிவனை நோக்கி தவம் இருந்த தலம், பள்ளுர் அருகே உள்ள திருமாறப்பேறு. இங்கு நத்தி தேவர் எழுந்து நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார்.

நைவேத்தியம்

நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.நாமும் நந்தி தேவரை துதித்து குருவருளும் இறையருளும் பெற்று பெருவாழ்வு பெறுவோம்.

Exit mobile version