Home Astrology | ஜோதிடம் முகூர்த்தம் வைப்பதில் கவனம்

முகூர்த்தம் வைப்பதில் கவனம்

இன்றைய அவசர நாளில் மண்டபம் கிடைக்கும் நாள் தான் முகூர்த்த நாள் என்றாகி விட்டது. ஆனால் வீடு மனை கோல, திருமணம் உள்ளிட்ட வைபவங்கள் வைக்க முகூர்த்தம் வைப்பதில் மிகுந்த கவனம் தேவை.அது குறித்த எச்சரிக்கை பதிவு தான் இது.

கடவுளுக்கு கண் இல்லையா?

வாஸ்து பார்த்து தான் வீடு கட்டினோம் ஆனால் குடியிருக்க முடியவில்லை. ஜாதகம் பார்த்து, பத்து பொருத்தமும் சரியாக பொருந்தி வரவே தான் வரன் பேசி முடித்தோம் ஆனால் விவாகரத்து என்ற நிலைக்கு வந்து விட்டது.

இந்த கடவுளுக்கு கண் இல்லையா? என கண்ணீர் வடிப்பவர்கள் எண்ணிக்கை இன்றைய காலக்கட்டத்தில் கூடிக்கொண்டே வருகின்றது.

கண் இல்லாதவர் கடவுள் இல்லைங்க, உங்களுக்கும் உங்கள் குடும்ப ஜோதிடருக்கும் தான். ஆம் வியப்பாக இருக்கின்றதா?கீழ் உள்ள கிரந்தத்தை கவனியுங்க புரியும்.

செங்கதிரோவார நாட் பரணிகூடில் செழும தியற்சித்திரைசே யுத்திராடம் பொங்குபுதனவிட்டம் பொன்வாரங்கேட்டை புகர் பூராடம்காரிரே வதியினாளில் மங்கையரை மீனம்புணரில் விதவையாகு மனையொடு சிற்பவழியில் போகிற்சாவாஞ் செங்கயற்கண்ணாற்பூதிதான் மலடியாவார் சிறுகுழவிபெறின்மரிக்குந் திண்ணந்தானே

புரியாதவர்களுக்கு மட்டும்…

ஞாயிறு – பரணி

திங்கள் – சித்திரை

செவ்வாய் – உத்திராடம்

புதன் – அவிட்டம்

வியாழன் – கேட்டை

வெள்ளி – பூராடம்

சனி – ரேவதி

நாம் முகூர்த்தம் வைக்கும் கிழமைகளில் மேலே குறிப்பிட்ட நட்சத்திரம் நடந்தால் திருமணம் செய்தால் பெண் விதவையாவாள். புது வீடு கட்ட வாஸ்து பூஜை மேற்கொண்டால் வீடு பாழாகும். தூர தேசம் பயணம் மேற்கொண்டால் மரணம் நேரலாம். பெண் ருதுவானனால் மலடி என பெயரெடுப்பாள், குழந்தை பிறந்தால் அரிஷ்டமாகும்.

விழித்துக்கொள்வோம்…

இவ்வாறு பழஞ்சுவடி பாடல் ஒன்று கூறுகின்றது இவை மட்டுமல்ல. முகூர்த்தம் அமையும் நட்சத்திரம் குறித்து ஏராளமான விதிகள் உள்ளன. தொகுத்தால் ஒரு தனி புத்தகமாக வளரும். கருவூரார் தெய்வீக மையத்தில் அனைத்து விதிகளையும் சீர் தூக்கிப்பார்த்தே முகூர்த்தம் வைக்கப்படுகின்றது.

சக்தியுள்ள கோவிலுக்கு போக வேண்டும் புத்தியுள்ள பிள்ளையை பெற வேண்டும் என்பது கிராமத்து வழக்குச்சொல். நல்ல ஜோதிடராய் பார்த்து நல்ல முகூர்த்தம் வைத்து புதுமனை புகுவிழா, திருமணம் உள்ளிட்ட வைபவங்களை நடத்தி, இறையருளால் வாழ்வில் நன்மையும் மேன்மையும் அடைவோம்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் மற்ற முகூர்த்தம் வைக்கும் விதிகளை கருவூரார் வலைதளத்தில் பதிவிடுகின்றோம். இனியாவது தினசரி நாட்காட்டியை பார்த்தோ, மண்டபம் கிடைக்கும் நாளே சுப முகூர்த்தம் என எடுத்துக் கொள்ளவோ வேண்டாம்.

Exit mobile version